கிணற்றில் தொழிலாளி பிணம்
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகாபுரி. இவரது மகன் சிவகுமார் (வயது 47). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுநெமிலி கிராமத்தில் உள்ள ரகுமான் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிவகுமார் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் சிவக்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story