மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 May 2022 10:30 PM IST (Updated: 23 May 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்பாடியில் புதிய சாலை அமைக்க பூமிபூஜை நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. நேற்று தனது காரில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். இதனால் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் (வயது 60) என்பவர் காருக்கு வழிவிடுவதற்காக சாலை ஓரமாக சென்றார். அப்போது அவர் அங்கிருந்த இரும்பு மின் கம்பத்தை பிடித்த போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பூமிபூஜை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் திரும்பி சென்றனர்.

1 More update

Next Story