காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி


காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 16 Jun 2023 1:00 AM IST (Updated: 16 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி பலியானார்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி பலியானார்.

காட்டுயானை தாக்கியது

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி அருகே சீயம்பன்குதிைய சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 50). கூலி தொழிலாளி. இவர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அம்பலமூலா அருகே அயினிபுறா ஆதிவாசி காலனியில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டுயானை ஒன்று திடீரென அவரை தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு

இதற்கிடையில் காட்டுயானை அங்கிருந்து சென்றது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பாஸ்கரனை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் காட்டுயானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


Next Story