அரசூரில்லாரி மீது கார் மோதல்; தொழிலாளி சாவு


அரசூரில்லாரி மீது கார் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 28 Oct 2023 12:15 AM IST (Updated: 28 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசூரில் லாரி மீது கார் மோதல்; தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

சென்னை சதாசிவம் சந்து சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கந்தசாமி மகன் கணேசன் (வயது 54). நகை தொழிலாளி. இவரும், திருவண்ணாமலையை சேர்ந்த மனோகரன் மகன் கமலக்கண்ணன் (40), சென்னை அயனாவரத்தை சேர்ந்த கணேசன் மகன் கதிர்வேல் (51) ஆகியோரும், சென்னையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.

காரை சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜசேகர் (46) என்பவர் ஓட்டினார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பழைய அம்மா உணவகம் அருகில் சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story