கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி


கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
x

மானூர் அருகே கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே கானார்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இங்கு தங்கியிருந்த விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூரைச் சேர்ந்த தொழிலாளி டேவிட்ராஜ் (வயது 32) நேற்று முன்தினம் மாலையில் கல்குவாரியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலையில் டேவிட்ராஜ் கல்குவாரியில் பிணமாக கிடந்ததைப் பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த டேவிட்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story