மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
x

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தார்.

திருச்சி

வையம்பட்டி அருகே உள்ள பேச்சக்காம்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 40). இவர் குரும்பபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு தண்ணீர் தெளித்தபோது, எதிர்பாராதவிதமாக துரைச்சாமியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story