ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி


ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 4:37 PM IST)
t-max-icont-min-icon

ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்

சேலம்

மேச்சேரி:-

ஜலகண்டாபுரம் அருகே கரட்டாண்டி பட்டி கோவில் அருகில் உள்ள ஏரியில் பிணம் கிடப்பதாக ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் இறந்து கிடந்தவர், ஜலகண்டாபுரம் அருகே குப்பம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது 58) என்பது தெரியவந்தது. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தாகவும், குடிபோதையில் ஏரியில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story