மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி


மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த   தொழிலாளி
x

மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

திருவாரூர்

மன்னார்குடி

மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையை சேர்ந்தவர் அருள்செல்வம் (வயது32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நந்தினி. கடந்த 25-ந்தேதி இருவருக்கும் திருமண நாள் என்பதால் 24-ந்தேதி மன்னார்குடி காந்தி ரோட்டில் உள்ள பேக்கரிக்கு கேக் வாங்க சென்றுள்ளனர். அப்போது நந்தினி கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலி சாலையில் அறுந்து விழுந்துள்ளது. இதனை அறியாத இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள உணவகம் மற்றும் பழரசக்கடையில் வேலை செய்து வரும் பிரசன்னா (35) என்பவர் சாலையில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை எடுத்து மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சங்கிலி சுந்தரக்கோட்டையை சேர்ந்த அருள்செல்வம் மனைவி நந்தினிக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீஸ்நிலையத்துக்கு வரவழைத்து அவர்களிடம் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கிடந்த சங்கிலியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி பிரசன்னாவை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் பாராட்டினர்.


Next Story