மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:15:41+05:30)

கிணத்துக்கடவில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் நேற்று கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் கிணத்துக்கடவை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கந்தசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story