சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

கோயம்புத்தூர்

கோவை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிறுமியுடன் பழக்கம்

கோவையை அடுத்த சூலூர் கருப்பண்ணன் சந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது28). இவர், பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை பார்க்க சென்ற போது அவருடைய 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது.

அதை பயன்படுத்தி அவர், சிறுமியுடன் நெருங்கி பழகினார். தந்தை இறந்ததால் தாயின் பராமரிப்பில் சிறுமி இருந்தாள். இதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை பார்ப்பதற்காக பிரகாஷ் அடிக்கடி சென்று வந்தார்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் அவர், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து கடத்தி சென்றார். பின்னர் அவர் மாலை மாற்றி சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பிரகாஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானாள். அதை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி கொடுத்து பிரகாஷ் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

10 ஆண்டு சிறை

இது குறித்து சிறுமி தன்னுடைய சித்தப்பாவிடம் கூறி கதறி அழுதாள். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம்சாட்டப்பட்ட பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பிரகாஷ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story