விஷவாயு தாக்கி தொழிலாளி பலி


விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
x

ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில், தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயுத் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூச்சுத்திணறி சாவு

ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை 8 தொழிலாளிகள் சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வேலூர் மாவட்டம், சதுப்பேரி சிறு காஞ்சி பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் (வயது 31) என்பவர் தொட்டியில் விழுந்து மூச்சுத் திணறி இறந்து விட்டார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டம், வி.சி. மோட்டூர் பகுதியை சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (24), சிப்காட் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மகேந்திரன் (49) ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை

உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு, வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறி இறந்த செந்தமிழ்ச்செல்வன் உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிப்காட் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story