கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x
சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் முல்லைவாடி அருந்ததியர் தெருவை சேர்ந்த தொழிலாளி சரவணன் (வயது42). இவரும், அவருடைய மகன் கவுதம் (16) ஆகிய இருவரும் ஒரு மொபட்டில் அம்மம்பாளையம் சென்று விட்டு வீடு திரும்பினர். மல்லைவாடி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் தந்தை- மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். காயம் அடைந்த இருவரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார். கவுதமுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story