சாலை விபத்தில் தொழிலாளி பலி


சாலை விபத்தில் தொழிலாளி பலி
x

தென்னிலை அருகே சாலை விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பெயிண்டர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள கூடலூர், காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் தென்னிலையில் இருந்து காமாட்சிபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

பழனிச்சாமி காமாட்சிபுரத்தில் இருந்து தென்னிலைக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தென்னிலை வடுகனூர் பிரிவு அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

தொழிலாளி பலி

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், பழனிச்சாமி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story