ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.

சேலம்

ஓமலூர்

மேச்சேரி வெள்ளார் வெள்ளப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் ஓமலூர் அடுத்த பெரமச்சூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். அப்போது பெரமச்சூர் ெரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் சென்றபோது ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற ெரயிலில் அடிபட்டு சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story