தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சரவணக்குமார் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story