கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கரூர்

தீக்குளிக்க முயற்சி

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை காப்பாற்றி, தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கரூர் மாவட்டம், செம்பியானத்தம் அருகே உள்ள அரசு கவுண்டனூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன் (வயது 49) என்பதும், அவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஆட்டு கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார்.

பரபரப்பு

இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த ஒருவர் கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், முருகேசன் புறம்போக்கு இடத்தில் கொட்டகை அமைத்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இன்று (வியாழக்கிழமை) கொட்டகையை அகற்ற வருவதாக தபால் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முருகேசனுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த முருகேசன் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story