இளம்பெண்ணை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


இளம்பெண்ணை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும், பால்ராம்பட்டை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாரியின் மகன் பெரியசாமி (31) என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டில் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம் பெரியசாமி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் அந்த பெண், பெரியசாமியின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணை பெரியசாமி, அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினரான காரனூரை சேர்ந்த கருப்பதுரை ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, மாரி, சந்திரா, கருப்பதுரை ஆகிய 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மாரி உள்பட மற்ற 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெரியசாமி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

1 More update

Related Tags :
Next Story