சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருநெல்வேலி
நெல்லை அருகே சீவலப்பேரி மடத்துப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 65). தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணிக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அன்புசெல்வி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.
Related Tags :
Next Story