மியான்மர் நாட்டில் பிணை கைதிகளாக உள்ள தொழிலாளர்களை மீட்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்


மியான்மர் நாட்டில் பிணை கைதிகளாக உள்ள தொழிலாளர்களை மீட்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x

மியான்மர் நாட்டில் பிணை கைதிகளாக உள்ள தொழிலாளர்களை மீட்கவேண்டும் என மத்திய அரசை வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப் பகுதிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்திய என்ஜினீயர்கள் கடத்தி செல்லப்பட்டு பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் முதலான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தாய்லாந்து நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது. அவர்களை மீட்டு, தாயகத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story