அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார். செயலாளர் லதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளூர் பணிமாறுதல் வழங்க வேண்டும். பழைய செல்போன்களை மாற்றி புதிய செல்போன் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அங்கன்வாடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000-த்தை கடந்தும் ரூ.400 மட்டுமே ஒதுக்கீடு செய்வதால் மீதிப் பணத்தை ஊழியர்களே தங்கள் சொந்த செலவில் வழங்கும் அவலநிலையை தவிர்த்து முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும். செலவினத்தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story