பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை பி.ஏ.பி. ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சாலை லாபத்துடன் இயங்கி வரக்கூடிய சூழலில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை போன்றவற்றை முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், நிலுவையில் உள்ள சலுகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் பெல் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story