கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள சிங்கோனா டேன்டீ பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7-ந் தேதி சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மாதம் நேற்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேற்று காலையில் பணிக்கு செல்வதற்கு முன்பு சிங்கோனா, பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட அலுவலகங்கள் முன்பு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து நிர்வாகத்தினர் கூறுகையில், நிதி பற்றாக்குறை இருந்ததால் இந்த மாதம் 7-ந் தேதி சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நிதி ஆதாரம் உள்ளதால் தொழிலாளர்களுக்கு இன்று(நேற்று) சம்பளம் வழங்கப்பட்டு விடும் என்றனர்.


Next Story