மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்
மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுள் சான்று
தமிழ்நாடு அமைப்புசாரா மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் போன்ற அனைத்துவிதமான விண்ணப்பங்களும் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று 60 வயது நிறைவடைந்த மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் அனைவரும் 2023-24-ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழை வருகிற 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை
எனவே மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களுடைய ஆயுள்சான்றினை பதிவேற்றம் செய்ய ஆதார்அட்டை, குடும்ப அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம் ஒன்று, வங்கி புத்தக நகல் மற்றும் நடப்பு மாதம் வரை வரவு, செலவு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கணினி மையம், இ-சேவை மையம், சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362-264549 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.