கூலியை குறைத்து வழங்குவதாக கூறி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் அனந்தபுரத்தில் பரபரப்பு


கூலியை குறைத்து வழங்குவதாக கூறி  தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்  அனந்தபுரத்தில் பரபரப்பு
x

கூலியை குறைத்து வழங்குவதாக கூறி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் அனந்தபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே அனந்தபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சிற்றரசூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனந்தபுரம் கடைவீதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு கூலியை குறைத்து வழங்குவதாக கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த அனந்தபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், செயல் அலுவலர் மலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூலியை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story