தொழிலாளர்கள் சாலை மறியல்


தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கக்கோரி அங்குள்ள மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story