பயிலரங்கம்

நெல்லை பல்கலைக்கழகத்தில் பயிலரங்கம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறையில் இருபெரும் விழா நடந்தது. குற்றநீதி மாணவர் மன்ற தொடக்க விழா மற்றும் பொருளாதார குற்றங்களின் புலனாய்வு பயிலரங்கம் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குற்றவியல் துறைத்தலைவர் மாதவ சோமசுந்தரம் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மன்றத்தினை தொடங்கி வைத்தார். மன்ற உறுப்பினர்களை உறுதிமொழி ஏற்கச்செய்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, மாணவர்களின் படைப்பாற்றல், புதுமைகள் மற்றும் புதிய எண்ணங்களை மாணவர் மன்றங்கள் மூலமே செயல்படுத்த முடியும். அரசின் புதிய செயல் திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதற்கும் இதுபோன்ற மாணவ மன்ற உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கும் மற்ற கல்லூரிகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக சிறப்பாக செயல்பட வேண்டும், என்றார்.
சிறப்பு விருந்தினர் கைலாசம் பேசும்போது, பொருளாதார குற்றங்கள் பற்றி விளக்கினார். தொடர்ந்து மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டனர். மாணவ மன்ற செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.






