ஒர்க் ஷாப் அதிபர் தற்கொலை
ஒர்க் ஷாப் அதிபர் தற்கொலை
துடியலூர்
கோவை இடையர்பாளையம் தேவாங்கநகர் நியூ வீவர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தனசேகரன் (வயது 27). இவர் அங்குள்ள பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.இவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுஜிதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தனசேகரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மனைவி தனசேகரன் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இரு குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்தும்படி கேட்டுக் கொண்டனர்.இந்த நிலையில் தொடர்ந்து தனசேகரன் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்ததால் கோபம் அடைந்த மனைவி சுஜிதா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேட்டுப்பாளையம் எஸ்.என்.நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு 3 வயது மகளுடன் சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து தனசேகரன், தன்னிடம் குடும்பம் நடத்தும் படி கேட்டுள்ளார்.ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த தனசேகரன் நேற்று சாணி பவுடரை (விஷம்) கலக்கி குடித்து மயங்கி கிடந்தார்.அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனசேகரன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
----
Reporter : D.P.RAJENDRAN Location : Coimbatore - THUDIYALUR