பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x

பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்து அதனை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் திட்டத்தின் செயல்பாடுகளை விரைந்து முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் புதிய வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகள் இருப்பின் அதனை கண்டறிந்து அறிக்கை அனுப்ப வேண்டும். நிவாரண முகாம்களை ஆய்வு செய்து கூடுதலாக புதிய நிவாரண முகாம்களை கண்டறிந்து அதிகப்படுத்த வேண்டும்.

வெள்ளம் பாதிக்க கூடிய நீர்நிலைகளை ஆய்வு செய்து அப்பகுதிகளில் வெள்ள தடுப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நீர்நிலை கால்வாய்களை தூர்வாரவும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அதனை உடனடியாக அகற்றவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, மாவட்ட வன அலுவலர் அருண்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story