திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x

திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாணவர்கள் வருகை தரம் குறித்தும், அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்தும், இடை நீற்றல் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி கற்கும் சூழலை உருவாக்கி தருவது குறித்தும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நடத்தும் பாட வகுப்பினை கண்காணித்து அதன் அறிக்கையை பதிவேடுகளில் பதிவிடவும் அறிவுறுத்தினார். மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து புனரமைத்திட வேண்டுமென மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதில் முதன்மை கல்வி அலுவலர் கீதா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story