உலக புத்தக தின கருத்தரங்கு


உலக புத்தக தின கருத்தரங்கு
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

கோத்தகிரியில் உலக புத்தக தின கருத்தரங்கு நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட கிளை சார்பில், உலக புத்தக தினத்தையொட்டி புத்தக வாசிப்பு முகாம் மற்றும் கருத்தரங்கு கோத்தகிரி கடக்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தனர். பின்னர் ஒவ்வொருவரும் தங்களது வாசிப்பு அனுபவம், புத்தகத்தின் முக்கிய கருத்துகள் குறித்து கலந்துரையாடினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு பேசும்போது, அமெரிக்காவில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் 6-ம் வகுப்பிற்கு வருவதற்குள் 200 புத்தகங்கள் படிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மாணவர்கள் சில நூறு பக்கங்களைக்கூட படிப்பதில்லை என ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் பாடபுத்தகங்கள் தான். புத்தகங்கள் படிப்பதால் மனித மனம் மென்மையாகிறது. பாடபுத்தகங்கள் அறிவுலகத்திற்கு ஒரு நுழைவுவாயில் மட்டுமே. பிற புத்தகங்கள்தான் வாழ்க்கைக்கு வழிகாட்டும். ஒரு மாணவர் கற்ற பொது அறிவுதான் வேலைவாய்ப்பை வழங்குகிறது என்றார். முன்னதாக ஆசிரியை பிருந்தா வரவேற்றார். முடிவில் ஆசிரியை அனுஷ்யா நன்றி கூறினார்.


Next Story