உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சென்னையில் சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா- ஆஸ்திரேலியா இடையே உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பறக்கும் வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நடைபெறும் போட்டிகளை முன்னிட்டு, வருகிற 8, 13, 18, 23, 27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story