உலக கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு...!


உலக கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு...!
x

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் 3 மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும், அதிகரித்து 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.


Next Story