குன்னூர், பந்தலூரில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்


குன்னூர், பந்தலூரில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர், பந்தலூரில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

நீலகிரி

பந்தலூர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாசில்தார் நடேசன் உத்தரவுபடி வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகம், அம்ரூஸ் வளைவு வருத்துறைக்கு சொந்தமான இடங்களில் மூலிகை மரக்கன்றுகளை வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர், கிராம நிர்வாக அலுவர்கள் கர்ணன், மாரிமுத்து உதவியாளர் கணிமொழி, காந்திசேவா மைய தலைவர் நவ்சாத் மற்றும் பொதுமக்களும் நட்டனர். இதேபோல் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கன்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அலி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு மரக் கன்றுகளை நடவு செய்தார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கன்டோன்மெண்ட் போர்டு முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார், சுகாதார கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story