உலக மீனவர் தினம்: வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம் - மக்கள் நீதி மய்யம்


உலக மீனவர் தினம்: வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம் - மக்கள் நீதி மய்யம்
x

வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம் என்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் பசி தீர்க்கும் உணவைத் தருவதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றனர் நம் மீனவர்கள். பல்வேறு சிரமங்கள், நெருக்கடிகளுக்கிடையே மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நெய்தல் நிலச் சொந்தங்களுக்கு மக்கள் நீதி மய்யம் உலக மீனவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மழை, புயல் என இயற்கைப் பேரிடர்களால் பரிதவிக்கும் மீனவர்களை, அண்டை நாட்டுக் கடற்படையும் அவ்வப்போது அத்துமீறித் தாக்குகிறது. உயிரைப் பணயம் வைத்து தொழில்புரிவோரை துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கிறது. கொடுஞ்சிறையில் அடைத்தும், படகுகளைப் பறிமுதல் செய்யும் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்துடன், அவர்களது உயிரையும் சேர்த்துப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் கடலில் போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களை, கரையிலும் போராடவிடக் கூடாது. மீனவர்களின் நலன்காக்க என்றும் மக்கள் நீதி மய்யம் துணைநிற்கும் என உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story