உலக சுகாதார நிறுவன டாக்டர்கள் ஆய்வு
உலக சுகாதார நிறுவன டாக்டர்கள் ஆய்வு
வால்பாறை
வால்பாறையில் காடம்பாறை வனப்பகுதிக்குள் உள்ள வெள்ளிமுடி மலை கிராமத்தில் உலக சுகாதார நிறுவன துணை மண்டல பொறுப்பாளர் டாக்டர் ஆஷா, தொடர் கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் வேலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவ குழுவினர் வருகிறார்களா, கிராம சுகாதார செவிலியர்கள் வருகிறார்களா, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் வருகிறார்களா, அவர்கள் மூலம் உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தனர்.
மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவது, கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் பாபுலட்சுமண், பகுதி சுகாதார செவிலியர் தேவகி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.