உலக எழுத்தறிவு தின விழா


உலக எழுத்தறிவு தின விழா
x
தினத்தந்தி 9 Sept 2023 1:00 AM IST (Updated: 9 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அரசு பள்ளியில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:-

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர்கள் இந்திரா, சரஸ்வதி, லட்சுமி, பாலச்சந்தர் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story