உலக செவிலியர் தின விழா


உலக செவிலியர் தின விழா
x

வேலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ராஜவேலு, துணை முதல்வர் கவுரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நர்சு பயிற்சிப்பள்ளி முதல்வர் ஜோதியம்மாள் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி டீன் பாப்பாத்தி பேசுகையில் செவிலியர்கள் தங்களது பணிகாலத்தில் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் நீங்கள் நோயாளிகள் விரைந்து குணமடையும் வகையில், சேவை ஆற்ற வேண்டும். நோயாளிகளிடம் அன்போடு நடந்து அவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகளை அளிக்க வேண்டும். சேவை மனப்பான்மையோடும், உங்களது உடல்நல பாதுகாப்போடும் பணியாற்ற வேண்டும் என்றார். முன்னதாக, உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி, ஓவியம், கட்டுரை, கவிதை, நடனம், வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அதில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துகொண்டனர். நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story