உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 12 July 2023 1:51 AM IST (Updated: 12 July 2023 5:04 PM IST)
t-max-icont-min-icon

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சாவூர்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி தஞ்சை ரெயிலடியில் நேற்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலையில் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

ஊர்வலம் காந்திஜிசாலை, ஆற்றுப்பாலம் வழியாக சென்று ஆஸ்பத்திரி வளாகத்தை அடைந்தது. இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் திலகம், குடும்பநலம் மற்றும் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மலர்விழி, வட்டார விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story