உலக மீட்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்


உலக மீட்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:56 AM IST (Updated: 26 Jun 2023 5:13 PM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி உலக மீட்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி உலக மீட்பர் ஆலயத்தின் 140-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவுக்கு புளியங்குடி பங்குத்தந்தை எட்வின் ராஜ் தலைமை தாங்கினார். பங்கு பேரவை துணைத் தலைவர் ராசையா, பொருளாளர் அருள் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்கு பேரவை செயலாளர் ஜோசப் அமல்ராஜ் வரவேற்றார். மதுரை கிறிஸ்து இல்ல குருமட பேராசிரியர் அருட்தந்தை சூசை செல்வராஜ், கொடியை ஏற்றி திருப்பலியாற்றினார்.

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 30-ந் தேதி நற்கருணை பவனியும், 1-ந் தேதி உலக மீட்பரின் சப்பரப்பவனியும், 2-ந் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு பேரவை நிர்வாகிகள், அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story