உலக சித்தர்கள் மாநாடு


உலக சித்தர்கள் மாநாடு
x

உலக சித்தர்கள் மாநாடு நடைபெற்றது.

கரூர்

உலக நன்மைக்காக ஞானபீடம் சார்பில் முதல் மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது. 2-வது மாநாடு கரூரில் உள்ள தனியார் மகாலில் நேற்று தொடங்கியது. இதில் சித்தர்களின் சீடர்கள், வாழும் சித்தர்கள், ஆதின சன்னிதானங்கள், ஆசிரம குருமார்கள், துறவிகள், சாதுக்கள், சிவனடியார்கள், பூசாரிகள், சித்த வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு லட்சத்து எட்டு ருத்திராட்சத்தில் 18 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று 108 சித்தர்கள் யாகம், பஞ்ச பூத யாகம் நடைபெற்றன. மேலும் சித்தர் பாடல்கள் பக்தி இன்னிசை கச்சேரி, தவம் செய்யும் முறை, வாசியோகம், யோகசன பயிற்சிகள் நடைபெற்றன.


Next Story