சென்னையில் 'உலக தர நிர்ணய நாள்' விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு


சென்னையில் உலக தர நிர்ணய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு
x

‘உலக தர நிர்ணய நாள்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு 3 கி.மீ. தூரத்திற்கு நடையோட்டம் நடைபெற்றது.

சென்னை,

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 75-வது ஆண்டு மற்றும் உலக தர நிர்ணய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 3 கி.மீ. தூரத்திற்கு நடையோட்டம் நடைபெற்றது. இதனை முன்னாள் தடகள வீராங்கனையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஷைனி வில்சன் தொடங்கி வைத்தார். நடையோட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற ஜும்பா நடன பயிற்சியில் வயது வித்தியாசமின்றி அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்.


Next Story