உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
வாலாஜாவில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகலிர் கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் லட்சுமணன், அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் பூங்குழலி ஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தற்கொலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறும் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story