உலக புலிகள் தின விழிப்புணர்வு பேரணி
புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ- மாணவிகள் புலியின் முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் திறம்பட கேள் என்ற தலைப்பில் மாதந்தோ றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதம் உலக புலிகள் தினத்தையொட்டி பள்ளியின் தமிழ் இலக் கிய மன்றம், பசுமை படை ஆகியவை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி புலிகள் குறித்த கருத்தரங் கம், போட்டி நடைபெற்றது. இதை பள்ளியின் தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
இதில், தமிழாசிரியர் பாலமுருகன் பேசும் போது, நாட்டில் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. உலகில் வசிக்கும் புலிகளில் இந்தி யாவில் 70 சதவீதம் உள்ளது. தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்பட 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. காடுகள் வளமாக இருக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ- மாணவிகள் புலியின் முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்றனர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரணியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.