உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்

கரூரில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். ஊர்வலம் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சர்க்கரைநோய், எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் வரும் வாய்ப்பு அதிகம், காசநோய் அனைத்து வயதினரையும் தாக்கும், குறுகிய கால சிகிச்சை எடுப்போம் காசநோயை தடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து காசநோய் விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு அரங்கமும், காசநோய் இல்லா கரூர் மாவட்டம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ணப்பலூன்கள் பறக்க விடப்பட்டன. காசநோய் ஒழிப்பு தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகையில் கையொப்பம் இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி கருவிகள் வழங்கப்பட்டன.


Next Story