நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு


நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு
x

நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் கிராமத்தில் நேற்று ஒருவர் மளிகை கடையில் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்று வாங்கியுள்ளார். அதனை அவர் வீட்டிற்கு கொண்டு சென்று உடைத்து பார்த்தபோது, அதில் புழுக்களும், மண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அதனை அந்த மளிகை கடைக்கு கொண்டு சென்றார். அப்போது அந்த மளிகை கடையை பூட்டி விட்டு உரிமையாளர் சென்று விட்டாராம். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story