மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம்


மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம்
x

மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம்

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தனது தாய் கண்ணம்மாளுடன் மொபட்டில் நடந்தை நான்கு ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடுமல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரபு (35) மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து மொபட் மீது மோதினார். இதில் மொபட்டில் சென்ற பிரகாஷ், கண்ணம்மாள் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story