ரெயில்வே பணிக்கு தேர்வு எழுத வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கீடு


ரெயில்வே பணிக்கு தேர்வு எழுத   வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கீடு
x

ரெயில்வே பணிக்கு தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

ரெயில்வே பணிக்கு தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரெயில்வே பணிக்கு தேர்வு

ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் 'டி' தேர்வு 3 கட்டமாக நடத் தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்வு முடிந்துள்ளது.

இந்த நிலையில், வடமத்திய ரெயில்வே (அலகாபாத்), வடமேற்கு ரெயில்வே (ஜெய்ப்பூர்). தென்கிழக்கு மத்திய ரெயில்வே (பிலாஸ்பூர்) பணிக்கு 2-வது கட்ட தேர்வு கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

தெற்கு ெரயில்வே (சென்னை), வடக்கு ெரயில்வே (டெல்லி), வடகிழக்கு எல்லை ெரயில்வே (கவுகாத்தி), கிழக்கு கடற்கரை ெரயில்வே (புவனேஸ்வர்) ஆகியவற்றுக்கு 3-வது கட்ட தேர்வு வரும் 8-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.

தேர்வு மையம் ஒதுக்கீடு

இந்த குரூப் டி தேர்வு கணினி அடிப்படையில் காலை, மதியம், மாலை என 3 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். ஆனால் தற்போது தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

இதில், தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகை யில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், சேலம் அல்லது சென்னையில் மையம் கேட்டு இருந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

இது போல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவருக்கு ஆந்திரா மாநிலம் கர்நூல் பகுதியிலும், கோவை உள்பட தமிழகத்தை சேர்ந்த பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில்தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதனால் ரெயில்வே பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

நீண்ட நாட்களாக படித்து தேர்வு தயாராகி வரும் நிலையில் எங்கு மையம் ஒதுக்கினாலும் சென்று எழுதியாக வேண்டிய கட்டாய நிலை இருப்பதாக விண்ணப்பதாரர்கள் கூறினர்.

குளறுபடிகள்

தமிழகத்தில் இருந்து ரெயில்வே பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுகிறது. இது போன்ற குளறுபடிகளால் ரெயில்வே பணியில் தமிழக மாணவர்கள் சேருவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

எனவே இது போன்ற குளறுபடிகள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story