எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் அந்த நூலினை வெளியிடுவதற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களின் பெயர், முகவரி, படைப்பின் பொருள் விண்ணப்பங்கள் மற்றும் படைப்பின் 2 பிரதிகள் போன்ற விவரங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரம்பலூர்- 621112 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Next Story