ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்


ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
x

நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மஞ்சள் ஏலம் நடைபெறும். நேற்று வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்திற்கு ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,000 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 40 மூட்டைகளும் கொண்டு விற்பனைக்காக வரப்பட்டு இருந்தன.

இதில் ஒரு குவிண்டால் விரலி ரகம் குறைந்தபட்சம் ரூ.6,365 முதல் அதிகபட்சமாக ரூ.8,989-க்கும் ஏலம் போனது. இதேபோன்று உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5,743-க்கும் அதிகபட்சமாக ரூ.7,369-க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ரூ.10,112-க்கும், அதிகபட்சமாக ரூ.16,012-க்கும் ஏலம் விடப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் 1,390 மஞ்சள் மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு விற்பனையானது.


Next Story