மஞ்சள் நீராட்டு விழா


மஞ்சள் நீராட்டு விழா
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

தேனி

கம்பத்தில் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிச்சட்டி, கரகம் ஆயிரங்கண் பானை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கம்பம் வேளாளர் பெருமக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி பல்லாக்கில் கவுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மனை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நீரை இளைஞர்கள் பக்தர்கள் மீது வாரி இரைத்தபடி சென்றனர். ஊர்வலம் கவுமாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி காளவாசல் தெரு, வ.உ.சி.திடல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, வேலப்பர் கோவில் தெரு, பழைய பஸ்நிலையம் வழியாக கோவிலில் வந்து முடிவடைந்தது. நிகழ்ச்சியில் ஆதிசக்தி விநாயகர் வேலப்பர் வேளாளர் பெருமக்கள் சங்கம் மற்றும் மத்திய சங்கத் தலைவர் முருகேசன், வேலப்பர் வேளாளர் பெருமக்கள் சங்க தலைவர் காந்தவாசன், கம்பராய பெருமாள் வேளாளர் பெருமக்கள் சங்க தலைவர் மின்னல் மணிகண்டன், வ.உ.சி. வேளாளர் பெருமக்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், தேனி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. கம்பம் தெற்கு நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story